Monday, December 29, 2008

எப்போதும்...

நிலவின் ஒளி இரவில் தான்…
சூரியனின் வெப்பம் பகலில் தான்…
தென்றலின் இதம் வசந்தத்தில் தான்…
பனியின் அழகு மார்கழியில் தான்…


என் இதயத்தின் காதல் எப்போதும்
வருடங்கள்
மாதங்கள்
வாரங்கள்
நாட்கள்
மணி
நிமிடம்
நொடி என…

Friday, December 19, 2008

நீ தூங்கும் நேரத்தில்


என்
இதய துடிப்பினை கூட
நிறுத்திடுவேன் …

அது
உன் தூக்கத்திற்கு
இடையூறானால்...

நீ
என் மார்பில்
தலை வைத்து
தூங்கிடும் போது...

Monday, December 8, 2008

கண்ணாலம்

நிர்க்கதியான இரண்டு வழிநடைகள்
சேர்ந்தது ஒன்றாக.....

இனி எப்போதும் பிரயாணிக்கும்
சேர்ந்தே ஒன்றாக,
கல்லறைக்கும் கூட !!!

Thursday, November 13, 2008

டேய் மச்சானே

நீ பிறக்கும் போதே நான்
பிறக்கும் வரம் தான் தரவில்லை

நீ இறக்கும் போதே நானும்
இறக்கும் வரமாவது தந்து விடு மச்சான்...

Tuesday, November 11, 2008

கிழிக்கப்படும் ஓர் கடிதம்...


(முதியோர் இல்லத்தில் இருந்து உன் தந்தை எழுதுவது)


நீ பிறந்ததோ
என் மனைவியின் மீதிருந்த என் காதலால்
நான் இங்கு இருப்பதோ
உன் மனைவியின் மீதிருக்கும் உன் காதலால்

உன் வீட்டில் நாய்க்கு கிடைக்கும் இடம் கூட
உன் அப்பன் எனக்கு இல்லை
உன் மனதில் இரக்கமும் இல்லை
என் மனதில் இறக்கமும் இல்லை....

உன் கால் சட்டை நாடாவை
கட்டி விட்டுருக்கிறேன்
என் வேஷ்டியை கூட என்னால்
கட்ட முடியவில்லை இன்று

உன்னை சபிக்க மனமில்லாமல்
வாழ்த்தவே செய்கிறேன்...
உன் மகன் காலத்திலாவது இந்த
முதியோர் இல்லம் இல்லாமல் போகட்டும்...

இப்படிக்கு,
கிழிக்கப்பட்ட ஓர் உறவு

Wednesday, November 5, 2008

பசி தீர்ப்பதால்...

கண்ணில் கண்ணீர் துளிகள்
எனக்காக வெங்காயம் உரித்ததால்...

விரலில் வெட்டு தழும்புகள்
எனக்காக காய்கறி வெட்டியதால்...

கையில் தீப்பட்ட காயங்கள்
எனக்காக சாதம் சமைத்ததால்...

என்னவளே நீயும்
என் தாய் தான்...


களைப்புடன் உன் பேனா


வானத்து நட்சத்திரங்களை புள்ளிகள்
என நினைத்து கோலமிட்டிருப்பேன்
தீர்ந்திருக்காது என் மைத்துளி...

பூமத்திய கடக மகர ரேகைகளை
எண்ணிரெண்டு முறை வரைந்திருப்பேன்
உடைந்திருக்காது என் முனை...

ஏழு கடல் ஊதா நிறங்களை
நிரப்பி எழுதி வற்ற வைத்திருப்பேன்
இருந்திருக்காது என் சுமை...

உன் காதலியின் பெயரை எத்தனை
முறை எழுதுவேன் நான்…

மற்ற எழுத்துக்கள் மறந்து
களைத்து விட்டேன்...

அவள் கண்களுக்கு மையிடும்
வாய்ப்பினை ஒரு முறை கொடு

அவள் நெற்றிக்கு பொட்டிடும்
வாய்ப்பினை ஒரு முறை கொடு


புத்துயிர் பெறுவேன் நான்...

இப்படிக்கு,
களைப்புடன்
உன் பேனா...

Friday, October 24, 2008

கண்ணிமைக்கும் நேரம் கூட

உன்னை பார்க்கும் போது
இமைக்க கூட மறுக்கிறது
என் இமைகள்...

அந்த கண்ணிமைக்கும் நேரம் கூட
உன்னை காண வேண்டுமாம் என் கண்கள்...

Thursday, October 23, 2008

மீண்டும் ஒரு ஜென்மம்

உன் உள்ளே சில
காலம் வளர வேண்டும்...

உன் விரல் பிடித்து
நடை பழக வேண்டும்...

உன் கை பிடித்து
உன் பெயரை
எழுத பழக வேண்டும்...
"அம்மா" என்று

மீண்டும் ஒரு ஜென்மம்
இருந்தால்...

நீ இல்லாத இந்த தனிமையில்


உன் கை மேல் என் கை வைத்து
பேசும் அந்த தினம் ஒரு நொடியை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...

என்னை பார்த்ததும் எனக்காக
இமைக்கும் அந்த உன் கண் சிமிட்டலை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...

உன் கண்களுக்கு மட்டும் நான்
அழகாய் தெரியும் அந்த உன் ரசனையை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...

புதிய ஆடை அணிந்து வந்தால்
நல்லா இருக்குடா என்ற அந்த உன் வார்த்தையை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...

சாலையை கடக்கும் போது என்
கைகளை இறுக பற்றும் அந்த உன் உணர்வை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...

நீ இல்லாத இந்த தனிமையில்
தொலைத்து கொண்டிருக்கிறேன் என்னையும் ....

Monday, October 6, 2008

பயணம்

நீ இல்லாத
ரயில் பயணம்...
தீயில் பயணம்...

Tuesday, September 30, 2008

என் அம்மாவிற்கு...


உன் இரண்டு கைகள் பிடித்து சில காலம்...

உன் இரண்டு விரல்கள் பிடித்து சில காலம்...

நடந்து பழகினேன் நான்...

உன் முன் ஓடுகிறேன் இன்று

என்னை பிடிங்க பார்ப்போம் என்று...

ஓடி வந்து என்னை பிடித்து கட்டி கொண்டாய்

என் கால்கள் வலிக்கும் என்று,

உன் கால்கள் வலித்ததை மறைத்து....

- உன் உயிர் செல்லம்...

அர்த்தம் அறிந்தேன்

நட்பு என்னும் வார்த்தைக்கு அர்த்தம் அறிந்தேன்
உன்னுடன் கை கோர்த்திருந்த போது....

பிரிவு என்னும் வார்த்தைக்கு அர்த்தம் அறிந்தேன்
உன்னுடன் கை குலுக்கி பிரிந்த போது....