Wednesday, February 11, 2009

நீ தரும் நினைவு


சிறு நெல்லிக்காயில்
உன் நுனி நாக்கினால்
எச்சில் வைத்து

அந்த ஈரத்தில்
உப்பினை தடவி
எனக்கு தரும் போதும்

நினைவுபடுத்துகிறாய்
என் அம்மாவையே ............

2 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்களுடைய சுயவிளக்கம் நன்றாக உள்ளது நண்பா.. கவிதையும்.. வாழ்த்துக்கள்..

ச. ராமானுசம் said...

நினைக்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது;
நல்ல கவிதை.

நெல்லிகாய் இல்லை ; கள்ளி காயில் கூட காதலி எச்சில் வைத்து தந்தாள்

நாவில் எச்சில் வரத்தான் செய்யும்