Thursday, October 23, 2008

நீ இல்லாத இந்த தனிமையில்


உன் கை மேல் என் கை வைத்து
பேசும் அந்த தினம் ஒரு நொடியை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...

என்னை பார்த்ததும் எனக்காக
இமைக்கும் அந்த உன் கண் சிமிட்டலை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...

உன் கண்களுக்கு மட்டும் நான்
அழகாய் தெரியும் அந்த உன் ரசனையை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...

புதிய ஆடை அணிந்து வந்தால்
நல்லா இருக்குடா என்ற அந்த உன் வார்த்தையை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...

சாலையை கடக்கும் போது என்
கைகளை இறுக பற்றும் அந்த உன் உணர்வை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...

நீ இல்லாத இந்த தனிமையில்
தொலைத்து கொண்டிருக்கிறேன் என்னையும் ....

2 comments:

அன்புடன் அருணா said...

ரொம்ப அழகு இந்தக் கவிதை....ஒவ்வொரு வரியும் உண்மையின் உயிப்பு...
அன்புடன் அருணா

கள்ளச்சிரிப்பு said...

நான் பெற்ற முதல் பாராட்டு !!! நன்றி...