Tuesday, May 12, 2009

பைத்தியக்கார மனது...

நீ சிரிக்கும் போது
உன் கன்னங்களில்
விழும் குழிகளில்
மட்டுமல்ல...

நீ
சூடான பாலை
தம்ளரில் எடுத்து
அது ஆறுவதற்காக
ஊதுகிறாயே
அப்போது அந்த பாலில்
விழும் குழியிலும்

விழுந்திருக்கிறது என்
பைத்தியக்கார மனது...

1 comment:

ச. ராமானுசம் said...

அவள் கன்னத்தில் உள்ள குழி
ஊதும் பொழுது காற்றுடன் கலந்து
பாலில் விழுந்து விட்டதோ ??